Sunday, January 2, 2011

ஈழத்திற்கு தந்த வரங்கள்

தீபாவளியை போல
போர்முனையில் வெடிக்கும்
ஆயிரம் சரங்கள்
வீடு திரும்பும் நாள் வருமா
என்று வீரர்களின் ஏக்கங்கள்
நாட்டில் அவர் செய்ய
காத்திருக்கும் பல ஆக்கங்கள்
எப்போது வெடிக்குமோ என்று
விழித்திருந்து விட்ட தூக்கங்கள்
அதனால் அவர் உடலில்
ஏற்பட்ட பல தாக்கங்கள்
நிரைவேறாமல் போன பல
நல்ல உள்ளங்களின் நோக்கங்கள்
அதற்காக ஏங்கித் தவிக்கும் உள்ளங்கள்
உள்ளக் கூக்குரல் கே ட்காமல்
சண்டையிடும் செவுடுகள்
கத்திப் பேசினாலும் யாரும்
கேட்காமல் காய்ந்த உதடுகள்
இதெல்லாம்
கடவுள் இந்த ஈழத்திற்கு தந்த வரங்கள்...!


மாமனிதன்

சிங்கமே வா!

புலியாய் புறப்படு!

இருப்பது ஓர் உயிர்!

அது தமிழுக்காக போகட்டும்!

தமிழனுக்காக போகட்டும்!

என்று மொழிந்தவனே ....

எதிர்கால சரித்திரமோ,

இந்த இனவெறியர்களையும்,

இணைந்து நின்ற குள்ளநரிகளையும்,

நயவஞ்சகர்கள், நாணயமற்றவர்கள்;

சொந்த இனத்தையே

காட்டி  கொடுத்த   துரோகிகள்

என்று பட்டியலிட்டு காறிஉமிழும்போது,

தன் இன விடுதலைக்காய்,

தன் இனத்தின் சுதந்திரமான,

சுயமரியாதைக்கான வாழ்க்கைக்காய்

போராடிய உன்னை மாமனிதன் என்று

என்றென்றும் பாராட்டும்."


இனத்தின் தேசியம்

இந்தத்
தமிழ்த் தேசிய உணர்வு
ஈழத்தமிழர் நிகழ்த்தும்
விடுதலைப் போருடன்
இணைக்கப் பட்டதினால்,
பூரண அர்த்தச் செறிவும் பெறலாயிற்று.
ஓர் இனம் தன் அடையாளத்தினை
எவ்வாறு முதன்மைப்படுத்த விரும்புகிறதோ
அதுதான் அந்த இனத்தின் தேசியம்

தமிழ் ஈழமுமா

தமிழா...
இன்னும் இந்த பொறுமை நீடித்திருந்தால்....

தமிழ் எண்கள்...
தமிழ் மாதங்கள்...
தமிழ் புத்தாண்டு...
தொலைந்து போன - இந்த
தமிழ் சொத்துக்களோடு - இனி
தமிழ் ஈழமும் சேரும்...!

ஈழத்தின் கண்ணீர்தானோ

ஈழத்தின் கண்ணீர்தானோ

அலைகள் தழுவும் தேசத்தில்
கொலைகள் தொடர்வதும் ஏனோ?

விடுதலை வேண்டி
வாழும் மாந்தர்க்கு
உரிமை மறுப்பது தர்மம்தானோ?

நாற்புறம் சூழ்ந்த
கடல் நீரினிலே
உவர்ப்பை நிறைத்தது
எங்கள் கண்ணீர்தானோ?

ஈழத்தின் விடுதலைக்காக

கால் நூற்றாண்டாய்
காத்திருக்கிறொம்
விடியலுக்காக...
விடுதலைக்காக...

எங்கள் பூமியை
நீர் சூழ்ந்திருப்பதனால்தான் என்னவோ
எங்கள் நம்பிக்கைகளும்
நீர்த்துப் போய்விட்டன

நிலுவையில் உள்ள எங்கள்
நிம்மதி
நிர்மூலம் ஆனதுதான்
நிதர்சனம்

போரினால்
புண்பட்ட எங்கள்
பூமி
பண்படுவது எந்நாளோ?

துவண்டு போயின
எங்கள் உள்ளங்கள்
காலமே!
நீ செய்த
நம்பிக்கைத் துரோகத்தால்...

ஈழம் நம் நாடு


ஈழம் நம் நாடு
எந்த மனிதைனயும்
வழக்கத்தை மாற்ற நினைப்பது தான்
புரட்சியென்றால்
களிப்புடன் அப்புரட்சியை
பல முறை செய்வேன்...!

தமிழின் கடைசி எழுத்து
இறக்கும் வரை ஈழம் கவி பாடும்...

ஈழம் வழியில் வரும்
தடைகளை உடைத்தெரிவோம்
''ஈழம் நம் நாடு '' என்பதை
உணர்ந்து முடிவில்லா
புகழை இவ்வுலகில் பெறுவோம்

ஈழத்தின் பரிதாபம்

அந்தோ பரிதாபமமா
தாயின் வயிற்றிலிருக்கும்
போதே உண்ணவில்லை
இந்த ஈழ தாயிடம் தான் பிறப்பேன்
என்று முன்பே எண்ணவில்லை

எங்காவது காமத்திற்கும் வறுமைக்கும்
பொறுப்பற்றதனத்திற்கும் பஞ்சத்திற்கும்
பிறந்திருக்க கூடாதா
அல்லது
ஈழம் பிறந்த பிறகு
பிறந்திருக்க கூடாதா

மொட்டுக்களே பூப்பதற்கு
முன்பே கருகிவிட்ட்டிர்களே ....!

அதற்கென்ன
ஈழம் பிறந்த பிறகு
இன்னொரு பிறவி எடுப்போம்..!

விதைத்து போயிருகிறர்கள்

விதைத்து போயிருகிறர்கள்

தமிழ்த்தாயே
மரம் தாங்கும் மண்ணாய்
இலை தாங்கும் மரமாய்

காய் தாங்கும் கொடியாய்
சேய் தாங்கும் தாயாய்

நீயே தாய்
நாங்கள் சேய்

ஈழத்தின் முடிவிலா
கொலைகள் கண்டு
முடியாமலே போகிறது
உன் இரங்கற்பா.. !

ஈழத்திற்காக இறந்தவர்கள்
எல்லோரும்
சிதை சிதைந்து போகவில்லை
விதை விதைத்து போயிருகிறர்கள்...!

ஈழத்து வலி

இரமேஸ்வரத்தில் எல்லோரும்
குளித்து கரை ஏறுகிறார்கள்
நாங்கள் குதித்து கரை ஏறுகிறோம்
பிறந்த குழந்தைய்ன் நெற்றியில் வைக்கிறாள்
பிடி மண்ணாய் கொண்டு வந்த தாய் மண்
கடல் கடந்து பார்க்க வந்ந்திருக்கின்றன
சோறு வைத்த காக்கைகள்

படகில் ஏறினோம் படகை விற்று

ஆழிப் பேரலைகளும் எங்கள் பெண்களை
வீடு புகுந்து இழுத்து போய் கொல்லத்தான்
செய்தன ஆனாலும்
இலங்கை வானொலியில் இருந்து நீங்கள்
பிறந்த நாள் வாழ்த்து கேட்கிறீர்கள்
நாங்கள் மரண அறிவித்தல் கேட்கிறோம்

முகாமிற்கு அருகில் உள்ள பள்ளியில்
இருந்து கேட்கிறாது
"யாதும் ஊரே யாவரும் கேளிர்"

இப்படிக்கு
வலிகளுடன் உங்கள் சொந்தங்கள்

தமிழீழம்

எனது ஈழக் கனவு
தனித் தமிழீழம் வேண்டும் - அதில்
தமிழினம் மட்டுமே வாழ வேண்டும்.
புரட்சி வெடிக்கும் முகத்தில் - துளிப்
புன்னகை மலர வேண்டும்.
வெறியாட்டம் கண்ட கண்கள் - இனி
வாண வேடிக்கைகள் காண வேண்டும்.
சயனைடு எடுத்தக் கைகள் - இனிச்
சாகுபடி செய்ய வேண்டுமே தவிரச்
சாகும்படிச் செய்யக்கூடாது.
சாவுகளைக் கண்ட மனிதர்கள் - மனச்
சாந்தத்தோடு வாழ வேண்டும்.
ஆயுதம் ஏந்தி நடந்த கால்கள் - கடவுள்
ஆலயம் நோக்கி நடக்க வேண்டும்.
வெடிகுண்டு ஏந்திய கைகள் - தமிழ்
வெண்பாட்கள் இயற்ற வேண்டும்.
குண்டு விழுந்த கானகங்களில் - குயிலின்
கானம் கேட்க வேண்டும்.
ஈழத்திற்காக உயிர்த் துறந்தவர்களை - எந்நாளும்
தமிழினம் போற்றிப் பாட வேண்டும்.
மனிதர்களை வதைத்தவர் நெஞ்சில் - இனியாவது
மனிதம் மலர வேண்டும்.
தனித் தமிழீழம் வேண்டும் - அதில்
தமிழினம் மட்டுமே வாழ வேண்டும்.

விடியபோகிறது ஈழம்

விடியல்களின் வெளிச்சத்தில்
விலாசம் தேடி
விரைந்து கொண்டேயிருக்கிறது
எங்கள் பயணம் !

இமைகளின் இடுக்கில்
இழைகிற சோம்பலில்
கருகப் பார்க்கிறது
எங்கள் கனவு !

இடர்கள் மிகுந்துவிட்ட
இருட்டுப் பயணத்தில்
இன்னும் வளரத் துவங்கவில்லை
எங்கள் நம்பிக்கை ஒளி !

வெற்றியை நோக்கிய
வெறி கொண்ட ஓட்டத்தில்
இனி ஓயப்போவதில்லை
எங்கள் பாதங்கள்

உலகை மறந்துவிட்ட
உழைப்பின் உச்சத்தில்
சிதறத்தான் போகிறது
எங்கள் இலக்கு !

வியர்வையின் குளியலில்
முயற்சியின் முடியலில்
விடியத்தான் போகிறது
எங்கள் ஈழம் ..!
CJCKRXRDRTWH

பரிதாபமாய் என் தாய் மண் !!!

பரிதாபமாய் என் தாய் மண் !!!


நான் நடை பயின்ற கடற்கரையில்
நான் பொறித்த என் காலடித் தடங்களை
போர் அலை வந்து முற்றாக அடித்துச்
சென்றிருந்தது.......

நான் மகிழ்ந்து சுவாசித்த
பூந் தென்றலில் கூட இன்று
பிணவாடை........

பொன்கதிர் விழைந்த கழனிகளில்
மலிந்து கிடக்கின்றது
பிணங்களின் எச்சங்கள்....

காளி கோவிலுக்குள் செருப்புப் போட்டால்
"காளிக்கிழவி கழுத்தை நெறிப்பா" என
அம்மா சிறுவயதில் சொன்ன ஞாபகம்....

ன்று மூலஸ்தானத்திலும் வெறியர்களின்
சப்பாத்துக் கால்தடங்கள்....
ஏன் அவர்கள் கழுத்தை மட்டும்
காளி நெரிக்கவில்லை??

பாடம் பயின்ற பள்ளிக் கூடங்கள்
காலம் செய்த கோலத்தால்
அகதி முகாம்களாயோ இல்லை
அந்நியனின் பாசறை ஆகவோ
மாறி தன் கோலம் மாறி இருந்தது....

முகவரி தொலைந்து
முட்கம்பிகளின் நடுவே
பரிதாபமாய் நான் நேசிக்கும்
என் தாய் மண்....

குரலிருந்தும் ஊமையாய்....
மௌன ஓலத்துடனும்,
கட்டுடைந்த கண்ணீருடனும்
செய்வதறியாது இக்கரையில் நான்.....

அமைவு

hand209
இது
தலைமுறை இடைவெளியின்
ஏங்கலும்…
ஏந்தலும்…

பாதுகாப்பை
உணரும் தருணம்…
இதுபோல் அமையுமா
ஈழத்தில்?





மக்களே இத்துடன் சித்தனின் கவிதைகளின் தொகுப்பு முடிவடைகிறது. சித்தனை சந்திக்க ......... http://naanchithan.wordpress.com/author/naanchithan/. வெட்டி ஒட்டுங்கள். 

உயரம்

உயரம்
உயரம்
கட்டொழுங்குடன்
தலைநிமிர்ந்து நிற்கும்
இந்த பனைமரத்தின் உயரத்தை
பொறுத்துக் கொள்ளமுடியாமல்
பொறுமியப்படியே இருக்கிறது,

அடர்த்தியாய் இருக்கும்,
அந்த ”போதி” மரம்

மிரட்சி

மிரட்சி
மிரட்சி
இந்த அனிச்ச முகத்தை,
உற்று கவனியுங்கள்!.

குருதியைவிட
கூடுதலாய்த் தெரியும் ‘மிரட்சியை’

விழுந்து வெடிப்பதற்கு தெரியாதுதான்,
வீசுகின்றவனுக்குமா தெரியாது?
குழந்தை என்று!

இன அழிப்பே அவனது இலக்கு!
குழந்தை என்பதா அவனுக்கு கணக்கு?!


குருதிப் புனல்
குருதிப் புனல்
நாடாளும் (ரா)நாசப்பச்சே!
உன்,
கொலைவெறி மோகத்திற்கும்,
அரசாளும் தாகத்திற்கும்,

ஈழத்தமிழினமே இரையாச்சு-அவர்
இரத்தம்கூட புனலாச்சு.

வலி
வலி
வாழ்ந்த வீடு,
வளமான பூமி,
நெடுங்கால உறவு,
நிம்மதி வாழ்வு

அத்தனையும் பிய்த்தெறியும்
அரச வன்முறையால்

எத்தனை இழந்திருந்தால்,
இத்தனை வலித்திருக்கும்!.

பார்வை
பார்வை
இதில் தெரிகிறது
இன அழிப்பிற்கான வேகமும்,
ஈழத்திற்கான தாகமும்.