
அடியோடு மறுப்போம்
ஆயுதம் வாங்கி,
ஈழத்தமிழினத்தை
இனவெறிக் கொண்டழிக்கும்,
இலங்கை உற்பத்தியை
அடியோடு மறுப்போம்! -நம்மினம்
அகதியாவதை தடுப்போம்.

வல்லுறவு
எதிர்க்கும் திராணியற்று,
மானத்தை சூரையாடி…
மாதரை இழிவுச்செய்ய,
வரிசையில் நின்று
வல்லுறவு கொண்டப்பின்…,
மருத்துவச் சோதனையில் -தம்
உயிரணுக்கள்…உலகிற்கு
உணமையைச் சொல்லும் என்று
உடலுறுப்பில் வெடி சொறுகி
உடல் வெடிக்க வைக்கின்ற
சிங்கள இராணுவத்தின்
செயலை…என்னச்சொல்ல?
இது… சிங்களனுக்குக்
கைவந்தக் கலை _அவன்
உறுப்பால் செய்கின்ற கொலை!.
(எல்லா காலகட்டங்களிலும்)

பசி
கோரபற்களினால்
குழந்தை இரத்தம் குடிப்பவனே!
உலகின் முன் மட்டும்
உத்தமனாய் நடிப்பவனே!
மக்கள் பசி என்றால்
மரக்கறி போதும்…
மகிந்தா உன் பசிக்கு,
மரணக்கறியா வேணும்!?
( வன்னியில் மக்கள் வாழ்விடங்களை நோக்கி சிறிலங்கா படையினர் இன்று (29 -03-2009)ஞாயிற்றுக்கிழமை நடத்திய அகோர எறிகணைத் தாக்குதல்களில் 16 சிறுவர்கள் உட்பட 49 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 27 சிறுவர்கள் உட்பட 125 பேர் படுகாயமடைந்துள்ளனர். )
No comments:
Post a Comment