
சாட்சி
தீர்வென சிங்களன்
தினமும் அரங்கேற்றும் காட்சி!,
அவன்,
கொலை ருசிகண்ட
கோரத் தாண்டவத்திற்கு
இதைவிட வேறென்ன சாட்சி?!
(09 சூன் 2006 -ல், மன்னாரில் சிங்களப்படையின் தாண்டவம்)

சிதைவு
உந்துகணைக்கு -எங்கள்
வாழ்வையும்,
உயிரையும்…
சிதைக்க மட்டுமே தெரியும்!
எனெனில் அது,
சிந்திக்க தெரியாத
சிங்கள ஆயுதம்.
(வன்னியில் நேற்றைய இராணுவ தாக்குதல்)

சுமை
இலங்கை (இராணுவம்) கொன்றதால்,
முதல்தலைமுறை சுமக்கிறது – தன்
மூன்றாம் தலைமுறையை.
(நேற்று வன்னியில், தன் மகனை பறிகொடுத்த கிழவி பேரனோடு)
(23 மார்ச் 2009)

தாய் நிலம்
சீர்படுத்தி – எங்களால்
வளப்படுத்தப்பட்ட தாய்நிலம்,
எதிரிகளினால் பாழ்படுத்தப்பட்டு,
எங்களைப்போலவே
எங்கள் தாய் நிலமும்
”அகதியாய்”.
No comments:
Post a Comment