Sunday, January 2, 2011

ஈழத்தின் கண்ணீர்தானோ

ஈழத்தின் கண்ணீர்தானோ

அலைகள் தழுவும் தேசத்தில்
கொலைகள் தொடர்வதும் ஏனோ?

விடுதலை வேண்டி
வாழும் மாந்தர்க்கு
உரிமை மறுப்பது தர்மம்தானோ?

நாற்புறம் சூழ்ந்த
கடல் நீரினிலே
உவர்ப்பை நிறைத்தது
எங்கள் கண்ணீர்தானோ?

ஈழத்தின் விடுதலைக்காக

கால் நூற்றாண்டாய்
காத்திருக்கிறொம்
விடியலுக்காக...
விடுதலைக்காக...

எங்கள் பூமியை
நீர் சூழ்ந்திருப்பதனால்தான் என்னவோ
எங்கள் நம்பிக்கைகளும்
நீர்த்துப் போய்விட்டன

நிலுவையில் உள்ள எங்கள்
நிம்மதி
நிர்மூலம் ஆனதுதான்
நிதர்சனம்

போரினால்
புண்பட்ட எங்கள்
பூமி
பண்படுவது எந்நாளோ?

துவண்டு போயின
எங்கள் உள்ளங்கள்
காலமே!
நீ செய்த
நம்பிக்கைத் துரோகத்தால்...

ஈழம் நம் நாடு


ஈழம் நம் நாடு
எந்த மனிதைனயும்
வழக்கத்தை மாற்ற நினைப்பது தான்
புரட்சியென்றால்
களிப்புடன் அப்புரட்சியை
பல முறை செய்வேன்...!

தமிழின் கடைசி எழுத்து
இறக்கும் வரை ஈழம் கவி பாடும்...

ஈழம் வழியில் வரும்
தடைகளை உடைத்தெரிவோம்
''ஈழம் நம் நாடு '' என்பதை
உணர்ந்து முடிவில்லா
புகழை இவ்வுலகில் பெறுவோம்

ஈழத்தின் பரிதாபம்

அந்தோ பரிதாபமமா
தாயின் வயிற்றிலிருக்கும்
போதே உண்ணவில்லை
இந்த ஈழ தாயிடம் தான் பிறப்பேன்
என்று முன்பே எண்ணவில்லை

எங்காவது காமத்திற்கும் வறுமைக்கும்
பொறுப்பற்றதனத்திற்கும் பஞ்சத்திற்கும்
பிறந்திருக்க கூடாதா
அல்லது
ஈழம் பிறந்த பிறகு
பிறந்திருக்க கூடாதா

மொட்டுக்களே பூப்பதற்கு
முன்பே கருகிவிட்ட்டிர்களே ....!

அதற்கென்ன
ஈழம் பிறந்த பிறகு
இன்னொரு பிறவி எடுப்போம்..!

No comments:

Post a Comment