
அமரர் ஊர்தி
அமரர் ஊர்தியாகின
நன்கொடையாளன்,
நா(ரா)சப்பச்சே!.
(26 மார்ச் 2009 -ல் வன்னியில் படையினரின் எறிகணை மற்றும் RPG தாக்குதலில் மாண்டவர்களில் (46) சிலர்)

கூடு
வேடர் கூட்டம்…
சிட்டுக் குருவிகளின்
சிறகுகளை முறித்த பின்
சிதைத்து போட்டக் கூடு!.
(1983, சூலை -ல் இன அழிப்பின் எச்சம்)

பிழிவு
தாங்கிக்கொள் எங்கள் பிரிவையும்
உன்னை பிரிவதுபோலோரு
உலகில் துயரில்லை
காத்திரு மண்ணே…
காலம் கனியும்வரை
கட்டாயம் வருவோம்.
மண்ணே உன் மடியில்
மறுபடியும் வாழனும்,
மரணம் நிகழ்ந்தப்பின்னும்
உனக்குள்ளே தூங்கனும்.
(20 ஆக 2008-ல், படை தாக்குதலால் வாழ்விடத்தை பிரியும் அக்கராயன் பகுதி மக்கள்)
No comments:
Post a Comment