Sunday, January 2, 2011

ஈழத்திற்கு தந்த வரங்கள்

தீபாவளியை போல
போர்முனையில் வெடிக்கும்
ஆயிரம் சரங்கள்
வீடு திரும்பும் நாள் வருமா
என்று வீரர்களின் ஏக்கங்கள்
நாட்டில் அவர் செய்ய
காத்திருக்கும் பல ஆக்கங்கள்
எப்போது வெடிக்குமோ என்று
விழித்திருந்து விட்ட தூக்கங்கள்
அதனால் அவர் உடலில்
ஏற்பட்ட பல தாக்கங்கள்
நிரைவேறாமல் போன பல
நல்ல உள்ளங்களின் நோக்கங்கள்
அதற்காக ஏங்கித் தவிக்கும் உள்ளங்கள்
உள்ளக் கூக்குரல் கே ட்காமல்
சண்டையிடும் செவுடுகள்
கத்திப் பேசினாலும் யாரும்
கேட்காமல் காய்ந்த உதடுகள்
இதெல்லாம்
கடவுள் இந்த ஈழத்திற்கு தந்த வரங்கள்...!


மாமனிதன்

சிங்கமே வா!

புலியாய் புறப்படு!

இருப்பது ஓர் உயிர்!

அது தமிழுக்காக போகட்டும்!

தமிழனுக்காக போகட்டும்!

என்று மொழிந்தவனே ....

எதிர்கால சரித்திரமோ,

இந்த இனவெறியர்களையும்,

இணைந்து நின்ற குள்ளநரிகளையும்,

நயவஞ்சகர்கள், நாணயமற்றவர்கள்;

சொந்த இனத்தையே

காட்டி  கொடுத்த   துரோகிகள்

என்று பட்டியலிட்டு காறிஉமிழும்போது,

தன் இன விடுதலைக்காய்,

தன் இனத்தின் சுதந்திரமான,

சுயமரியாதைக்கான வாழ்க்கைக்காய்

போராடிய உன்னை மாமனிதன் என்று

என்றென்றும் பாராட்டும்."


இனத்தின் தேசியம்

இந்தத்
தமிழ்த் தேசிய உணர்வு
ஈழத்தமிழர் நிகழ்த்தும்
விடுதலைப் போருடன்
இணைக்கப் பட்டதினால்,
பூரண அர்த்தச் செறிவும் பெறலாயிற்று.
ஓர் இனம் தன் அடையாளத்தினை
எவ்வாறு முதன்மைப்படுத்த விரும்புகிறதோ
அதுதான் அந்த இனத்தின் தேசியம்

தமிழ் ஈழமுமா

தமிழா...
இன்னும் இந்த பொறுமை நீடித்திருந்தால்....

தமிழ் எண்கள்...
தமிழ் மாதங்கள்...
தமிழ் புத்தாண்டு...
தொலைந்து போன - இந்த
தமிழ் சொத்துக்களோடு - இனி
தமிழ் ஈழமும் சேரும்...!

No comments:

Post a Comment