Sunday, January 2, 2011

தாலாட்டு

தாலாட்டு
தாலாட்டு
செல்லடி சத்தமின்றி
செல்லமே நீ உறங்கு,

தாய்ப்பாலும் வத்திப்போச்சு
தங்கமே நீ உறங்கு,

வேதனையை தாங்கிக்கடா
வேகமா அழுதிடாத!

அழும் சத்தம் கேட்டாக்கூட
அங்கிருந்தே ”ஆட்லெறி”யை
ஆர்மிக்காரன் வீசிடுவான்.
           (துணுக்காய் அகதி)
ஆசை
ஆசை
நிலாச் சோறு
        வேண்டாம்,

நிம்மதிச் சோறு
         போதும்
.

 (துணுக்காய் அகதி)
அரசநெருப்பு
அரசநெருப்பு
நேற்று,
கதைத்துக் கொண்டிருந்தவர்கள்,

இன்று,
கதைக்கப் படுகின்றவர்கள்.

உபயம்!
இனத்தை அழிக்கும்
இலங்கையின்,
அரச நெருப்பு (எறிகுண்டு வீச்சு).

தளிர்மனம்

இழப்பு
இழப்பு
பாலூட்டிய மார்புகள்
சோறுட்டிய கைகள்
கரிகட்டைகளாக,

தன்னின வேர்களின் அழிவை
தாங்குமா…இத்தளிர்
?

சிங்களவெறி
சிங்களவெறி
இறந்தவர்களை எரிப்பது
சிலரின் நெறி,

இறப்பதற்காக எரிப்பது
சிங்களனின் வெறி.

வெறிச்சின்னம்
வெறிச்சின்னம்
எறிகணை கைநீட்டி
கருவறை உயிர்த்தேடி
சிசு கறி தின்னும்
சிங்கள வெறியர்க்கு…

இந்தப் படமே…ஆதாரம்!
உலகே,
இனியும் மௌனம்
என்பது உனக்கு அவமானம்!!

சாட்சி

சாட்சி
சாட்சி
இன அழிப்பே
தீர்வென சிங்களன்
தினமும் அரங்கேற்றும் காட்சி!,
அவன்,
கொலை ருசிகண்ட
கோரத் தாண்டவத்திற்கு
இதைவிட வேறென்ன சாட்சி?!

                  (09 சூன் 2006 -ல், மன்னாரில் சிங்களப்படையின் தாண்டவம்)

சிதைவு
சிதைவு
உடலை பிளந்த அந்த
உந்துகணைக்கு -எங்கள்
வாழ்வையும்,
உயிரையும்…

சிதைக்க மட்டுமே தெரியும்!

எனெனில் அது,
சிந்திக்க தெரியாத
சிங்கள ஆயுதம்.

                (வன்னியில் நேற்றைய இராணுவ தாக்குதல்)
சுமை
சுமை
இரண்டாம் தலைமுறையை
இலங்கை (இராணுவம்) கொன்றதால்,

முதல்தலைமுறை சுமக்கிறது – தன்
மூன்றாம் தலைமுறையை.

    (நேற்று வன்னியில், தன் மகனை பறிகொடுத்த கிழவி பேரனோடு)
                                              (23 மார்ச் 2009)

தாய் நிலம்
தாய் நிலம்
சிறுக சிறுக
சீர்படுத்தி – எங்களால்
வளப்படுத்தப்பட்ட தாய்நிலம்,

எதிரிகளினால் பாழ்படுத்தப்பட்டு,
எங்களைப்போலவே

எங்கள் தாய் நிலமும்
”அகதியாய்”.

அமரர் ஊர்தி

அமரர் ஊர்தி
அமரர் ஊர்தி
அமரும் ஊர்தித்தான்…,
அமரர் ஊர்தியாகின

நன்கொடையாளன்,
நா(ரா)சப்பச்சே!.

          (26 மார்ச் 2009 -ல் வன்னியில் படையினரின் எறிகணை மற்றும் RPG  தாக்குதலில் மாண்டவர்களில் (46) சிலர்) 
கூடு
கூடு
வில் அம்போடு வந்த
வேடர் கூட்டம்…

சிட்டுக் குருவிகளின்
சிறகுகளை முறித்த பின்
சிதைத்து போட்டக் கூடு!.
    (1983, சூலை -ல் இன அழிப்பின் எச்சம்)

பிழிவு
பிழிவு
தாங்கிய மண்ணே,
தாங்கிக்கொள் எங்கள் பிரிவையும்
உன்னை பிரிவதுபோலோரு
உலகில் துயரில்லை

காத்திரு மண்ணே…
காலம் கனியும்வரை
கட்டாயம் வருவோம்.

மண்ணே உன் மடியில்
மறுபடியும் வாழனும்,
மரணம் நிகழ்ந்தப்பின்னும்
உனக்குள்ளே தூங்கனும்.

            (20 ஆக 2008-ல், படை தாக்குதலால் வாழ்விடத்தை பிரியும்  அக்கராயன் பகுதி மக்கள்)

உயிர்…

உயிர்...
உயிர்...
கரைகின்ற என் உயிரை…
காற்றோ  தடுக்கிறது!.
உலகமோ தவிர்க்கிறது!!.

       (ஈழத்தில் ஒரு பட்டினிக் காட்சி)
இழப்பு
இழப்பு
இழப்புகள் என்பது…
எங்களின் உரிமையாகிவிட்டது!

ஆனால்,
உரிமைகள் இன்னமும்
இழப்புகளாகவே…இருக்கின்றன.

        (ஈழத்தில், இதயம் கணக்கும் காட்சி)
''அவை''
''அவை''
ஒரு தாய்
ஒரு தந்தை
இரு குழந்தைகள் என
மகிழ்ச்சியால் நிறைந்திருந்தது வீடு.

பின்,
ஒரு தாய்
ஒரு தந்தை
இரு குழந்தைகள் என
மரணத்தால் நிறைந்திருந்தது வீடு.

”மகிழ்ச்சி”
அவை வராதத்திற்கான அடையாளம்.

”மரணம்”
அவை வந்துச்சென்றதன் அடையாளம்.

அந்த ”அவை”
சிங்கள வெறி கும்பல்!.

        (13 மே 2006 _ல் யாழ் தீவகம், அல்லைப்பிட்டியில் கடற்படையின் வெறிச்செயல்)
   (தமிழ் மனத்திற்காக மறுப்பதிவு)
இலங்கை தேனீர் குடிப்பது,
ஈழதமிழரின்….
”இரத்தத்திற்கு” நிகரானது.

இலங்கை உடை உடுத்துவது,
”நிர்வாணமாய்…
நிற்பதற்கு நிகரானது.

இலங்கை விமானச் சேவை நாடல்,
நான்கு குடும்பத்தை…
”அகதி” யாக்கும் முயற்சி.

உறவுகளே!
இலங்கை பொருட்கள் தவிர்ப்போம்1
ஈழ உறவுகளை காப்போம்.


ஸ்ரீலங்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு நாம் கொடுக்கும் பணம் ஸ்ரீலங்கா அரசு குண்டுகளை வாங்கி எமது மக்கள் மீது போடவே பயன்படுகிறது எனவேசிறிலங்காவின் உற்பத்தி பொருட்களையும் சேவைகளையும் ஒட்டு மொத்தமாகப் புறக்கணிக்குமாறு கனடிய தமிழ்மக்கள் உட்பட புலம்பெயர் தமிழர்களை அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.
.boycot4

அடியோடு மறுப்போம்

அடியோடு மறுப்போம்
அடியோடு மறுப்போம்
அயல் நாட்டு எற்றுமதியில்
ஆயுதம் வாங்கி,
ஈழத்தமிழினத்தை
இனவெறிக் கொண்டழிக்கும்,

இலங்கை உற்பத்தியை
அடியோடு மறுப்போம்! -நம்மினம்
அகதியாவதை தடுப்போம்.

வல்லுறவு
வல்லுறவு
எம் வீரர்களை
எதிர்க்கும் திராணியற்று,

மானத்தை சூரையாடி…
மாதரை இழிவுச்செய்ய,

வரிசையில் நின்று
வல்லுறவு கொண்டப்பின்…,

மருத்துவச் சோதனையில் -தம்
உயிரணுக்கள்…உலகிற்கு
உணமையைச் சொல்லும் என்று
உடலுறுப்பில் வெடி சொறுகி
உடல் வெடிக்க வைக்கின்ற
சிங்கள இராணுவத்தின்
செயலை…என்னச்சொல்ல?

இது… சிங்களனுக்குக்
கைவந்தக் கலை _அவன்
உறுப்பால் செய்கின்ற கொலை!.

    (எல்லா காலகட்டங்களிலும்)

பசி
பசி
தன்,
கோரபற்களினால்
குழந்தை இரத்தம் குடிப்பவனே!

உலகின் முன் மட்டும்
உத்தமனாய் நடிப்பவனே!

மக்கள் பசி என்றால்
மரக்கறி போதும்…


மகிந்தா உன் பசிக்கு,
மரணக்கறியா வேணும்!?

                  ( வன்னியில் மக்கள் வாழ்விடங்களை நோக்கி சிறிலங்கா படையினர் இன்று (29 -03-2009)ஞாயிற்றுக்கிழமை நடத்திய அகோர எறிகணைத் தாக்குதல்களில் 16 சிறுவர்கள் உட்பட 49 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 27 சிறுவர்கள் உட்பட 125 பேர் படுகாயமடைந்துள்ளனர். )

பயணம்

பயணம்
பயணம்
வீட்டினில் வண்டி
இயல்பு நிலை,

வண்டியில் வீடு
இடப்பெயர்வு நிலை.

இன்றைய,
வாழ்க்கை பயணத்திற்கு
வண்டியில் வீடுதான் சரி.

ஏனெனில் -எம்மினத்தை
துடைத்தொழிக்க….
துரத்துவதுதானெ அவன் குறி!?

        (23 ஒக்ரொபர் 2008) (பூநகரியிலிருந்து இடம்பெயரும் அகதி)
அதிசய மரணம்
அதிசய மரணம்
கருவறையை
கல்லறையாக்க,
துப்பாக்கி ரவைகள்,
கர்ப்பிணியின் உடல் புகுந்து
சிசு உயிர் துளைத்து…

பிறப்பிற்கு முன்னேயும்
மரணத்தை நிகழ்த்தும்
இலங்கையின் இனவெறிக்கு
இது உதாரணம்,
இதைவிட எது உலகரணம்?
           (நேற்று 27 மார்ச் 2009 -வன்னியில் படையினரின் தாக்குதலில் மாண்ட 61 பொதுமக்களில், பிறக்காத இந்த சிசுவும் அடக்கம்)

யார் குற்றம்
யார் குற்றம்
ஒற்றை கொலுசோடு
உருகுலைந்து கிடக்கும்
பெற்றவள் உடலருகெ
பிள்ளையும் நசுங்கி…
…  ….  … 
உலகே…. ….
இங்கே குற்றம் என்ன?

ஈழத்தில் தமிழினமாய் பிறந்ததா?
இல்லை _ நீ
இலங்கையை கண்டிக்க மறந்ததா?

        (26 ஏப்பிரல் 2006 – மூதூரில் சிறிலங்கா படையினரின் கொலைவெறித் தாக்குதல்)