
குழி
உடல் புதைக்க…….
ஈழத்தில் வெட்டுகிறோம்,
உயிர் பிழைக்க !!!!!
(வாழ்வைத் தொலைத்து, வாடும் நம் உறவுகள்)

கூட்டு, வேட்டு, ஓட்டு?!
இலங்கையோடு ஏன்வைத்தாய் கூட்டு?-அங்கே
எம்மின வாழ்விற்கு வைக்கிறாயே வேட்டு!
இனியுமா உனக்கு தமிழனின் ஓட்டு!!
(இந்தியாவின் துணையுடன் இலங்கையின் வன்முறையால், கண்ணீர் விட அவகாசமின்றி……உயிர்விடும் நம் உறவு.)

கோழையின் வீரம்
நாசம் செய்வதை கூடிப்பேசி,
நச்சு எரிகுண்டை நாற்புறமும் வீசி.
கொத்துக்கொத்தாய்ச் செய்கிறாய் கொலை!,
உலகம்,
உற்று கவனித்தால் என்னவாகும் உன் நிலை?!!
( உலகிலே தடை செய்யப்பட்ட அயுதங்களை பாவித்தாவது விடுதலைப்புலிகளை அழிப்பதற்கு இந்தியாவும், சிறிலங்கா கொடிய அரசும் முயற்சி செய்து கொண்டிருக்கின்றது. எரி நச்சுக்குண்டு பட்டு உடல் எரிந்த நிலையில் இறந்துகிடக்கும் போராளிகள்) (திங்கட்கிழமை, 06 ஏப்ரல் 2009,)

வெறியாட்டம்
உடுத்தியதை துகிலுரித்து,
சுற்றிநின்று அவமதித்து
எட்டி உதைக்குது,
காட்டுமிராண்டிகளின் கூட்டம்!. -இது
கால்நூற்றாண்டுக்கு முன்பே
சிங்களன் போட்ட வெறியாட்டம்!!.
(1983 கறுப்பு யூலையில் நடந்தேறிய கொடூரம்