
உலகே...நிறுத்து
தமிழினம் சாகுது!
இரத்தம் வழிய
தமிழ் உயிர் வேகுது!!
உலகே…நிறுத்து!,
இலங்கையின் யுத்தத்தையும்!,
எம்மின இரத்தத்தையும்!!,
(வெள்ளிக்கிழமை, 24 ஏப்ரல் 2009.
ஒரு காகம் இறந்தால் ஆயிரம் காகம் கூடியழும். தமிழன் இறந்தால்
அவன் சொந்தங்களே அழமுடியாத நிலை. இறந்தவர்களை விட
இருப்பவர்களை காப்பதுதான் இப்போதுள்ள அவசரம்)
அவன் சொந்தங்களே அழமுடியாத நிலை. இறந்தவர்களை விட
இருப்பவர்களை காப்பதுதான் இப்போதுள்ள அவசரம்)

இனவெறி...
இனவெறி உருவாக்கிய,
சனங்களும்…
பிணங்களும்…!.
( வன்னியில் சிறிலங்கா அரசின் பிணந்தின்னிப் படைகள் நடாத்திய இனப்படுகொலை. வெள்ளிக்கிழமை, 24 ஏப்ரல் 2009)

உறவின் உடல்கள்
உடல்களாய் ஆக்கிவிட்டது இலங்கை!
உலகே…இனியேனும்,
உடைத்தெறி உன் மெளன விலங்கை!!
( படையினரின் அகோர எறிகணைத் தாக்குதலில் இன்றும் 287 பொதுமக்கள் பலி; கியூடெக் பணிப்பாளர் உட்பட 300 பேர் படுகாயம். வியாழக்கிழமை, 23 ஏப்ரல் 2009)
|

ஆயுத முத்தம்!
பூமியை தாக்குது நித்தம்_அங்கே
பூவிற்கும் ஆயுத முத்தம்!!.
(இனவெறி ஆயுதத்திற்கு
இலக்கான சிறுவன்)
No comments:
Post a Comment