
விளிம்பில்...
உயிர் மெல்ல கரையுது,
அகில தேசத்தின்
மனசாட்சி மறையுது,
கையின் விளிம்பிலும்
காலத்தின் விளிம்பிலும்,
… … …
காட்சியால் இதயம் உறையுது!.
(இலங்கையின் இன அழிப்பு போரினால்….
வாழ்வின் விளிம்பில், பட்டினிக் குழந்தையின்…பால்முகம்)

சினம் பிறக்குது
மண்ணில் பட்டாலே…
மனமது துடிக்கும்.
மழலையின் தலையையும்
மண்ணோடு நசுக்குவது…
இலங்கையைத் தவிர்த்து
எங்கே நடக்கும்?
இந்தக் காட்சியால்
மனம் கணக்கிறது,
மகிந்தா உன்மேல்
சினம் பிறக்கிறது!.
(ஈழத்தில் நம்மினம் இப்படி _இந்த
இனத்தை காப்பது எப்படி?)
- வாழும்கிட்லர்
பல நாட்டை மிரட்டினான்.
இவன்,
பல நாட்டிற்கு விரட்டினான்
அவன்….
இனத்தை அழிப்பதற்காக
ஆள நினைத்தவன்.
இவன்….
ஆளுவதற்காக
இனத்தை அழிப்பவன்.
அவன் வாழ்ந்த கிட்லர்.
இவன் வாழும் கிட்லர்!
(வாழும் கிட்லராக…ரா(நா)சப்பச்சே)

குழந்தைவேட்டை
வேட்டை!
குதறி போட்டிருக்கிறது
குழந்தையின் உயிர் கூட்டை!!
குழந்தை என்றால் …
உள்ளம் உருகும்,
மகிந்தா உனக்குள்
எத்தனை மிருகம்.
(படம் கொடூரம் என்று பார்ப்பதை தவிர்க்காதிர்கள்………………………..
பார்க்கும் உங்களுக்கே துயரென்றால்…… பட்டுணரும் அவர்களுக்கு??????????)
No comments:
Post a Comment