
வன்முறையின் எச்சம்
குடும்ப வியர்வையை
குழைத்துக்கட்டிய வீடு.
எங்களின் மூச்சுக்காற்று…
முட்டிமோதி…
நிம்மதியைப் பிரதிபலித்த சுவர்கள்,
எங்களின் மகிழ்ச்சியை
அடைகாத்த கூரை…
அப்பம்மா மடியில் நானும்
அம்மா மடியில் தங்கையும் என…
கதைத்துக்கொண்டிருந்த கூடம்,
அத்தனையும்,
சிதைந்து சின்னாப்பின்னம் ஆனது
சிங்கள துப்பாக்கியின் சீறலில்.
இன்று எச்சமாக…
காயம்பட்டச் சுவரும்….\,
உயிர் பிழைத்த நானும்.
(ஆண்டுகள் கடந்து பல கடந்து
ஆசைக்கு ஒரு படம்…வாழ்ந்த இடத்தில்)
No comments:
Post a Comment