
வாடிக்கை
உறுப்புகளை நசுக்கி,
உயிரை…
இரத்தத்தில் தோய்த்தெறிவது,
இலங்கையின் வாடிக்கை!.
இதைக் கண்டிக்காத
உலகின் செயல்…
இன்றுவரை வேடிக்கை!!.
( ஞாயிற்றுக்கிழமை, 19 ஏப்ரல் 2009. முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு பகுதியில் உள்ள பாதுகாப்பு வலயம் மீது சிறிலங்கா படையினர் நேற்று நள்ளிரவு தொடக்கம் இன்று இரவு வரை நடத்திய தாக்குதல்களில் 310 அப்பாவி பொதுகள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 542-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர்.)

உடன்பாடு
இனவெறிக்கு…
உடல் “சகதி”யாக.
உடன்படுகிறது
எங்காவது…
உயிர் “அகதி”யாக.
(இலங்கை இராணுவ இன்னலினால்…இடம்பெயரும் எம்மினம்)

வாழ்ந்த இனம்...
தன்மானத்துடனும்,
தன்மானத்தில்
தனிறைவுடனும்,
“வாழ்ந்த இனம்”
இன்று,
உள்நாட்டிலேயே அகதியாகி
ஒருவேளை உணவுக்கென
கை நீட்டுது!_இது
உணர்வுள்ள தமிழனின்
உள்ளத்தில் பாரம் கூட்டுது!
ஈழத்திற்கு ஆதரவு என்போர்க்கு
இத்தேர்தலில் ஓட்டளிப்போம்!
இலங்கைக்கு ஆயுதம் தந்தோர்க்கு
இப்பவே திருவோடளிப்போம்!!
No comments:
Post a Comment