
இரட்டைத் தாக்குதல்!!!
ஏதுமில்லா நிலை!
மரணம் ஒன்றே
இதற்க்கான விலை!!
ஆயுதம் அனுப்பி
மக்களை கொல்லுதல்!
அரிசி பால்மா அனுப்பாது
மரணத்தில் தல்லுதல்!!
இப்படித்தான்…
இலங்கை செய்யுது,
இரட்டைத் தாக்குதல்!
அதன் எண்ணமெல்லாம்,
ஈழத்தமிழினத்தை
இல்லாது ஆக்குதல்!!.
(மனசாட்சி உள்ள வாக்காளர்களே!
ஈழம் காக்க வாக்களியுங்கள்,_அங்கே
இருப்பவர்களுக்கேனும் வாழ்வளியுங்கள்.
ஈழத்தமிழினத்தைக் காக்கும் கடைசி ஆயுதம் உங்கள் கைகளிள்)

எங்கேடா போர்நிறுத்தம்???
உயிர் போகும்…கிழவியை,
கனரக ஆயுதத்தால்
கை கால் உடைத்துக் கொல்லுது!.
இந்தியாவும் இலங்கையும்
இதைத்தான்
போர்நிறுத்தமுன்னு சொல்லுது!!.
இது,
இந்திய இலங்கை கூட்டு நாடகம்!
இன்றைய திகதிக்கான ஓட்டு நாடகம்!!.
(கனரக ஆயுத தவிர்ப்பு காலத்தில் படையினரால் மக்கள் பாதுகாப்பு வலயம் மீது 5600 எறிகணைகள் ஏவப்பட்டுள்ளன: 200 பொதுமக்கள் கொலை; 1000 ற்கு அதிகமானோர் காயம் |
செவ்வாய்க்கிழமை, 28 ஏப்ரல் 2009) |
No comments:
Post a Comment