கரும்புலிகள்
கரும்புலிகள்

மரணத்தை…
பயத்தோடல்ல
ஆசையோடு நெருங்கியவர்கள்!

எதிரி
எமன்
இருவருக்குமே மிரட்டலானவர்கள்!

“நாளை” என்ற கனவின்
நம்பிக்கை மரணங்கள்.

இவர்கள்…
புரட்சி பாதையின்
உயிராயுதங்கள்!
இதைவிட ஏது
உயராயுதங்கள்!!

இவர்களுக்கு…
ஈழமே…தாகம்!
தேகமே…ஈகம்!!

       (இவர்கள் இல்லாது ஈழ வரலாறு இல்லை……ஆயுதத்தோடு அல்ல  ஆயுதமாய் வாழ்ந்தவர்களுக்கு எம் அக வணக்கம்)