வடக்கில் வசந்தம் ???
எங்களின் பூர்வீகம்.
அங்கே சூழ்ந்தது…
சிங்கள போர்மேகம்.
மண்ணையும் மனிதரையும்
சிதைத்தது அந்த இனமோகம்.
இன்று,
“வடக்கில் வசந்தம்”
மென பெயர்வைத்து…
அங்கே,
சிங்கள இனத்தையும்
குடிவைத்து…
தமிழரின் வரலாற்றை
மறைக்கிறான்!
தனியுரிமை கோர
மறுக்கிறான்!!
இது,
சிங்களன் செய்கின்ற
சதி திட்டம்!
இதை,
சிந்திக்குமா உலகின்
மேல்மட்டம்!!
(மீள குடியமர்த்தும் போது சிங்களனையும் ஒன்றாக குடியமர்த்தி…தமிழர்களை அடக்கி ஆளவும் கொத்தடிமையாக்கவும் தனியுரிமை கோருவதை தடுக்கவும் போடும் சதிதிட்டத்திற்குதான், “வடக்கில் வசந்தம்” என்று பெயரிட்டு காய் நகர்த்தப்படுகிறது.)
No comments:
Post a Comment