
வீடு
மரத்தில் கூடு,
சிறகொடிந்த எங்களுக்கு
மரமே…வீடு!.
(சிங்கள வெறியர்களால் சிதறிய குடும்பம்)

மலிவானது மரணம்
படைவெறி மீதி தின்றது.
மலிவாகிப் போனது
தமிழனின் மரணம்!,
மற்றவரும் சாகும்முன்
தமிழீழம் வரணும்!!.
( 04 ஏப்ரல் 2009) ( சிறிலங்காவின் இனப்படுகொலைக்கு உள்ளாகியுள்ள வன்னியில் கடந்த 28, 29, 30ம் திகதிகளில் இடம்பெற்ற படுகொலைத் தாக்குதல், ஒரு காட்சி)

துயரம்
… … ….
முழுமையாய் கைகால்
முளைக்காத…எனக்கு,
எறிகணையின் அதிர்ச்சி
மரணத்தை தந்தது…..
என்…மரணமாவது
உன்க்கு அதிர்ச்சியை தந்ததா?
( சிறிலங்காவின் இனப்படுகொலையில் கர்ப்பிணிப் பெண்களும் பலியாகி வருகின்றனர். கடும் எறிகணைத் தாக்குதல் அதிர்ச்சியில் ஆறு மாதக் கருவொன்று வயிற்றிலேயே இறந்துள்ளது. 28 வயதான கர்ப்பிணிப் பெண்ணுக்கே இந்த நிலை ஏற்பட்டுள்ளது. வயிற்றில் இருந்து குழந்தை சத்திரசிகிச்சை மூலம் அகற்றப்பட்டபோதும், தாயாரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். திகதி- 15-மார்ச் ௨009.) (தமிழ் மனத்திற்காக மறுபதிவு)
No comments:
Post a Comment