- பயங்கரவாதிகள்???
மழலைகள் துடிக்கும்.
மகிந்தாவின் ஆயுதமோ
மழலைமீதும் வெடிக்கும்.
பயங்கரவாதத்தை,
இப்படித்தான்…
அழிக்கிறான்.
பச்சிளங்குழந்தைகளை
கொன்றுத்தான்…
குவிக்கிறான்.
உலகம்_ இதை,
உணர்ந்துக் கொள்ள மறுக்கிறது!
இலங்கை_ தன்
கொலை கணக்கை பெறுக்கிறது!!.
(ஈழத்தில் பேரினவாதிகளால் கொல்லபடும்…நம் பிஞ்சு உறவுகள்)
- இந்திய நாடகம்
காங்கிரஸ் கூட்டணி தயாரிப்பில்
இத்தாலியின் இயக்கத்தில்…ஓர்
இந்திய நாடகம்.
“ஆயுதம் அனுப்பி
அதிசய போர் நிறுத்தம்”
இவர்களின் தேவை…
ஈழ தமிழனின் உயிரும்,
இங்குள்ளத் தமிழனின் ஓட்டும்.
உயிருக்கு,
ஆயுதம் அனுப்புது!.
ஓட்டுக்கு,
அழுவதாய் நடிக்குது!!.
இன்னுமா தமிழன்
முட்டாளாய் இருப்பான்?
இந்தத் தேர்தலில் உங்கள்
முகத்திரை கிழிப்பான்!.
(ஈழத்தமிழினத்தினை கொன்று குவிக்கும் சிறிலங்கா அரசுக்கு 80 சரக்குந்துகளில் போர் தளவாடங்களை இந்திய அரசு இன்று அனுப்புகிறது. சேலம் வழியாக செல்லும் பொழுது இதை கேள்விப்பட்ட தமிழுணர்வாளர்கள் அவ்வண்டிகளை தடுக்கும் முயற்சிகளில் இறங்கினர். அதில் 5 லாரிகளை கோவையில் அடித்து எரித்துள்ளனர். பலர் கைது.)
No comments:
Post a Comment