
கிழிந்தப்புத்தகம்
அகழ்வாராட்சி சொல்லும்,
இங்கே
கனரக ஆயுதம்
பாவிக்கபட்டதையும்,
கண்ணீரோடு ஓரினம்
பாதிக்கப்பட்டதையும்.
அப்போதாவது…
உம்மென்று இருக்கும்
உலகறியுமா…?
சிங்கள ஆயுதம்
கிழித்து போட்ட
தமிழ் புத்தகத்தை!
(இலங்கை இராணுவத்தின் இறுதிக்கட்ட யுத்தத்தில் 20,000 தமிழ் மக்கள் இனப்படுகொலை செய்திருப்பதாக, த டைம்ஸ் குற்றம் சுமத்தியுள்ளது. அரசாங்கம் மேற்கொண்ட எறிகணை வீச்சுக்களால் அவர்கள் கொல்லப்பட்டதாக த டைம்ஸ் மேற்கொண்ட அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.)
No comments:
Post a Comment