- உயிர்த் தே(பே)டிகள்
ஒட்டிக் கொண்டிருக்கும்
ஒருத்துளி உயிரையும்
ஆயுதம் கொண்டு நசுக்கிறான்
அதையோரு சிங்களன் ரசிக்கிறான்.
இது,
அன்று தொடக்கம்
இன்று வரை தொடருது!
எம்மினம்,
அரை உயிர், கால் உயிராய்
அவதியாலே கதருது!!
எல்லைகளற்று
எங்கெங்கோ சிதறுது!!!.
(1983-ல் ஈழ தமிழினத்தின் மேல் நடாத்தப்பட்ட வன்முறையில் ஒருத்துளி.)
- ஈழத்தில் ஒரு கோன்டானாமோ!
கைகளுக்கு விலங்கிட்டு
கண்களைப் பிடுங்கி_அதை
கால்களால் மிதித்தது…
காடையர்க் கூட்டம்.
இன்று,
கைகால்களை கட்டி
ஆடைகளை உருவி,
“அவை” போடுகின்றன…
துச்சாதன ஆட்டம்.
இது,
உடலியல்
உளவியல் சித்ரவதை!
உறவுகளே!
உலகுக்கு பரப்புங்கள்…
சித்தன் சொல்லுமிதை!!
(15 வயது தொடக்கம் 35 வயதிற்கு உட்பட்ட இளைஞர் மற்றும் யுவதிகள் கைது செய்யப்பட்டவர்களை முழு நிர்வாணமாக்கி இருவர் இருவராக கைவிலங்கிட்டு வீடுகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், வீடுகளில் முழு நிர்வாணமாக நுளம்புக்கடியுடன் மற்றும் பல அவஸ்தைகளில் தமிழர்கள் கைதிகளாக உள்ளதாக எமது புலனாய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன)
No comments:
Post a Comment