
அக்கா எழிலிக்கு
கனடா…
அப்பாவுக்கும் அம்மவுக்கும்
தமிழ்நாட்டின் அகதி முகாம்.
தம்பி ரூபனுக்கு
வன்னி மாவீரர் துயிலுமில்லம்
தமிழினி எனக்கு
கம்பி வலைப்போட்ட
வவுனியா முகாம்.
எங்களின்,
ஒற்றை முகவரியை
இராணுவம் சிதைத்தது.
இத்தனை முகவரி
எங்களை வதைத்தது.
(போருக்கு பிந்தய ஈழத்தமிழரின் வீடும் குடும்பமும்)
No comments:
Post a Comment