
நம்பிக்"கை"
வழிந்தோடும் குருதியிலும்
வாழும் நம்பிக்”கை” இருந்தது!.
இன்று…
சிங்கள ஆயுதத்தால்
சிதைந்துப் போனது…
என்,
வாழும் நம்பிக்”கை”யும்,
வடிவான நல்ல “கை” யும்.
(சிங்கள இனவெறியால்…
சிறகிழந்த நம்முறவு.)

மாலதி.....
ஒரே வீதியில்தான் வசித்தோம்,
ஒரே பாடசாலையில் படித்தோம்,
உன் பார்வைக்குள் நானும்…
என் பார்வைக்குள் நீயுமென களித்தோம்.
இனவெறி தாக்குதல்…நம்மை
இருவேறு திசைகளில் விசிறியடிக்க…
… … …
இன்று…
என்,
மனமெல்லாம் நீயிருக்க…!
என் தோழி…
மாலதி நீ எங்கிருக்க?
(இன்றைய ஈழத்தில்
இடபெயர்வின் அதிர்வு)

கண்ணீர் ?????
தழும்புகள் தெரியாது!.
காலம்முழுதும் அழுகையென்றால்
கண்ணீர் சுரக்காது!!.
இது,
தொடர்வலியின் வெளிப்பாடு!.
இனவெறி,
தொடர்ந்து தாக்குது விழிப்போடு!!.
(திங்கட்கிழமை, 20 ஏப்ரல் 2009. வன்னியின் ‘பாதுகாப்பு வலய’ பகுதியிலிருந்து வெளியேறிச் சென்று நேற்று இரவு தன்னிடம் அகப்பட்ட ஆயிரம் வரையான மக்களை மனிதக் கேடயங்களாக முன்னிறுத்தி இன்று சிறிலங்கா படையினர் மேற்கொண்ட பாரிய முன்னகர்வின் போது, அவர்களால் மேற்கொள்ளப்பட்ட கொடூரமான இனஅழிப்புத் தாக்குதலில் இன்று திங்கட்கிழமை 1,496 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 3,333-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர். இவர்களில் 476 பேர் சிறுவர்கள். )
No comments:
Post a Comment