
"கருப்பு யூலை"கள்!
வாழ்விடத்தில்…
கலவரம் செய்தது!
இன்று,
கலவர இடத்தில்…
வாழச் செய்யுது!!
இழப்பும்
வலியும்
மாற வில்லை!
இது,
பேரின வாதத்தின்
மாறாத் தொல்லை!!
(1983 -ல் தமிழர்களின் மீது அரசே நடத்திய இனகலவரத்தில்…சொத்துக்கள் அழிப்பு, கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்ற கொடிய துயரங்கள் கட்டவிழ்த்து விடப்பட்டன. அதே துயரங்கள் இப்போதும் பசி பட்டினியுடன் முள் கம்பிகளுக்குள் நடத்தப் படுகின்றன)
No comments:
Post a Comment