
இடர்
இடர்களுக்கு மத்தியில்
எங்களின் ஏக்கம்?
இன்னுமா வரவில்லை
எங்களிடம் தாக்கம்??
(ஈழத்தில் ஒரு காட்சி)

மிரட்டல்
கொஞ்சம் வெளியில் வந்தேன்.
அந்த நேரத்திலும்,
ஆகாய சத்தம் மிரட்டுது!
அன்றாடம் எம்வாழ்வை,
அரச யுத்தம் விரட்டுது!!.
(நிம்மதியின்றி……நாளும் மிரளும் நம் உறவு)

துரத்தல்
சிங்களத்தால்……..,
வாழ்விடம் இழந்து
வந்த இடம் இது.
இங்கிருக்கும் மிருகம் கூட
பாவம் பாக்குது.(பார்க்கிறது)
அந்த,
இனாழிப்பு மிருகம் தான்
பாய்ந்து தாக்குது!.
(இன அழிப்பிற்கு பயந்து,
இளைப்பாறும்
உயிரும்…………..
உடமைகளும்…….)
No comments:
Post a Comment