தமிழீழம்
எனது ஈழக் கனவு தனித் தமிழீழம் வேண்டும் - அதில் தமிழினம் மட்டுமே வாழ வேண்டும். புரட்சி வெடிக்கும் முகத்தில் - துளிப் புன்னகை மலர வேண்டும். வெறியாட்டம் கண்ட கண்கள் - இனி வாண வேடிக்கைகள் காண வேண்டும். சயனைடு எடுத்தக் கைகள் - இனிச் சாகுபடி செய்ய வேண்டுமே தவிரச் சாகும்படிச் செய்யக்கூடாது. சாவுகளைக் கண்ட மனிதர்கள் - மனச் சாந்தத்தோடு வாழ வேண்டும். ஆயுதம் ஏந்தி நடந்த கால்கள் - கடவுள் ஆலயம் நோக்கி நடக்க வேண்டும். வெடிகுண்டு ஏந்திய கைகள் - தமிழ் வெண்பாட்கள் இயற்ற வேண்டும். குண்டு விழுந்த கானகங்களில் - குயிலின் கானம் கேட்க வேண்டும். ஈழத்திற்காக உயிர்த் துறந்தவர்களை - எந்நாளும் தமிழினம் போற்றிப் பாட வேண்டும். மனிதர்களை வதைத்தவர் நெஞ்சில் - இனியாவது மனிதம் மலர வேண்டும். தனித் தமிழீழம் வேண்டும் - அதில் தமிழினம் மட்டுமே வாழ வேண்டும். | ![]() |
விடியபோகிறது ஈழம்
விடியல்களின் வெளிச்சத்தில் விலாசம் தேடி விரைந்து கொண்டேயிருக்கிறது எங்கள் பயணம் ! இமைகளின் இடுக்கில் இழைகிற சோம்பலில் கருகப் பார்க்கிறது எங்கள் கனவு ! இடர்கள் மிகுந்துவிட்ட இருட்டுப் பயணத்தில் இன்னும் வளரத் துவங்கவில்லை எங்கள் நம்பிக்கை ஒளி ! வெற்றியை நோக்கிய வெறி கொண்ட ஓட்டத்தில் இனி ஓயப்போவதில்லை எங்கள் பாதங்கள் உலகை மறந்துவிட்ட உழைப்பின் உச்சத்தில் சிதறத்தான் போகிறது எங்கள் இலக்கு ! வியர்வையின் குளியலில் முயற்சியின் முடியலில் விடியத்தான் போகிறது எங்கள் ஈழம் ..! CJCKRXRDRTWH | ![]() |
No comments:
Post a Comment