
பாடசாலையிலும்...!!!
கொல்லத் துடிக்குது,
பாடசாலையிலும்
குண்டு வெடிக்குது.
பதுங்குக் குழிக்குள்
பள்ளிப் பிள்ளைகள்,
பயந்து ஒளியும்
சின்ன முல்லைகள்.
மனசாட்சி உள்ளோரை
இக்காட்சி வருத்தும்,
கொலைவெறி மகிந்தாவை…
நீதிக்கூண்டில் நிறுத்தும்!
(பாடசாலையிலும் படை மிரட்டலுக்கு உள்ளாகி, துயருரும் நம் குலக் கொழுந்துகள்) (ஈழம் பற்றிய என் ஐம்பதாவது படைப்பு இது.)

ஒற்றை நம்பிக்கை
உறவுக்கென்ற…
ஒற்றை நம்பிக்கையின்
உயிர் உறங்கிவிட்டது.
என்,
உறவு எல்லையும்…
என் ஒரே உயிரில் சுருங்கிவிட்டது.!
( பாதுகாப்பு வலயப் பகுதிகளான அம்பலவன்பொக்கணை, வலைஞர்மடம் மற்றும் பச்சைப்புல்மோட்டை ஆகிய பகுதிகளில் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3:15 மணி தொடக்கம் பகல் முழுவதும் சிறிலங்கா படையினர் ஆட்லறி எறிகணை, பல்குழல் பீரங்கி, ஆர்பிஜி உந்துகணை மற்றும் தொலைதூர துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதல்களை அகோரமாக நடத்தினர். ஞாயிற்றுக்கிழமை, 12 ஏப்ரல் 2009)

மொட்டுகள்
காய்ந்தாலே மனம் வாடும்!
சிங்களத்தின் வான்படையோ
பூக்களில்தான் குண்டு போடும்!!
(முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பு பகுதியில் உள்ள பாதுகாப்பு வலயப் பிரதேசம் மீது சிறிலங்கா படையினர் இன்று ஞாயிறு அதிகாலை நடத்திய அகோர எறிகணை, துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதல்களில் 294 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 432 பேர் படுகாயமடைந்துள்ளனர். ஞாயிற்றுக்கிழமை, 12 ஏப்ரல் 2009 )
No comments:
Post a Comment