பிரபாகரன் , சித்தனின் 100 வது ஈழக்கவிதை
பிரபாகரன்
என்னும் உன் பெயர்தான்
இந்த நூற்றாண்டின்
ஆண்மையின் அடையாளம்.

கால்நூற்றாண்டு நிர்வாகம் – உன்
கைகளில் இருந்திருந்தால்
இரண்டு மூன்று ஜப்பானை
ஈழம் கண்டிருக்கும்.

உன் தமிழீழ தாகத்தை
உலகம் உணர்ந்திருந்தால்
அங்கே,
தமிழச்சிகள்
கற்போடு வாழ்ந்து சாகும்
கனவுப் பலித்திருக்கும்.

விதியின் நேர்கோடேனும்
விலகாது இருந்திருந்தால்
ஈழத்தின் உற்பத்தியை
இவ்வுலகம் புசித்திருக்கும்.

தன்மானத்தின் கம்பீரமே!
இன்று,
வந்துவிடாதெ
மாவீரர் உரையாற்ற

நாளை,
வந்துவிடு
காடையர்க்கு பாலுற்ற.

(தேசிய தலைவருக்கு (26- 11- 2009) எமது 55 தாவது பிறந்த நாள் வாழ்த்துக்கள்)
அன்பானவர்களே!!!!
இது ஈழம் மட்டுமே உள்ளடக்கிய ஓர் ஆவணம்.
என் படைப்பை தயவு செய்து  உங்களின் தளத்தில் மறுப்பதிவு செய்யாதிங்க. இது என் உணர்வு இதை நான் பத்தகமாக்கும் எண்ணம் உள்ளது. நாளை குழப்பம் வராமல் இருக்க தயவு செய்து  மறுப்பதிவு செய்யாதிங்க.இதுவரை அப்படி செய்தவர்கள் அதனை நீக்கிவிடவும்.

 அன்புடன்,
  நான் சித்தன். மன்னிக்க வேண்டும் சித்தரே. நம்மில் நான்கு பேராய் இதை நகலெடுத்தால் நாளை இணைய புரட்சியில் உம்முடையது தொலைந்தாலும் என்னுடையதை கொண்டு வரலாறு உரைக்கலாமே........ http://naanchithan.wordpress.com/category/%E0%AE%88%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8D/. இதுவே சித்தனின் வலைமனை. மீண்டும் மன்னிப்பு கோரும் ஆசிரியன்.